OMG: Show off. Its Compliment.
வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்
முன் குறிப்பு –
இலங்கை, ராஜீவ் கொலைவழக்கு பற்றிய, இதுவரை
அதிகம் பேர் அறியாத, விவாதிக்காத –
சில தகவல்களை அண்மையில் நான் காணக் கூடி வந்தது. அவற்றைப் பற்றி விரிவாக எழுத விரும்பினேன்.
இரண்டு மூன்று பகுதிகளாகத் தொடரக்கூடிய அளவுக்கு
செய்திகள் அதில் உண்டு.
ஆனால், அதற்குள் இந்த விஷயம் ……
பொதுவாக, நான் ஈடுபாடு காட்டும் விஷயம் அல்ல இது. ஆனாலும் பண்பாட்டுச் சீரழிவுக்குத் துணை
போகும் சில நடப்புகளை யாரும் கண்டிக்காமல்,
தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப்
பார்க்கிறேன். எனவே மற்ற விஷயங்களுக்குள் போகும் முன்னர், இதைப்பற்றி எழுதவேண்டியதும் என் கடமையே என்று எண்ணுகிறேன்..
———————————–
பெண்களை உயர்வாக மதிக்கும் நாடாகத்தான் இருந்தது இது. கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள எலெக்ட்ரானிக்
சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சி,
நாகரீகம் என்று நினைத்து அரங்கேற்றப்படும் அநாகரீகங்கள் –
தவறையே சரி என்று வாதிக்கும் தவறான போக்கு…..
பணம் இருந்தால், புகழ் இருந்தால்,
என்ன வேண்டுமானாலும் செய்யலாம் –
எதையும் ஏற்றுக் கொள்ள வைக்கலாம் – என்கிற மனோபாவம்,
5 வயதுச் சிறுமியைக் கூட சீரழிக்கும் மனசாட்சி அற்ற
மனித மிருகங்களின் எண்ணிக்கை – எல்லாமே
அண்மைக்காலங்களில் வேகமாக வளர்ந்து வருகின்றன.
திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு அளவுக்கு மிஞ்சிய
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களது உளரல்கள் எல்லாம் தத்துவங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ட்விட்டர், பேஸ்புக், இத்யாதி தொடர்புகளால் விஷவேகத்தில்
இவை விரிவாகப் பரப்பப்படுகினறன.
ஆங்கில செய்தித்தாள் ஒன்று – ஒரு நடிகை…
View original post 317 more words