சதிகாரர்களால் நிரம்பிய ஆனந்த உலகம்

உலகம் சதிகாரர்களால் நிரம்பியிருக்கிறது

ஆறாவது படிக்கும் போது ஒரு சமூக அறிவியல் டீச்சர் இருந்தார். சிலம்புச் செல்வி என்று பெயர். ஒல்லியாக இருப்பார். வயதும் குறைவாகத்தான் இருக்கும். படித்து முடித்தவுடன் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அதனால் இந்த டீச்சரை ஏய்த்துவிடலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் அவர் அப்படியெல்லாம் இல்லை.கடுகு. சுறுசுறுவென காரம் ஏறும். வகுப்பு தொடங்கிய ஒரு மாதம் வரைக்கும் பெரிய பிரச்சினை வரவில்லை. ஆனால் அதன் பிறகு வீட்டுப்பாடம் எழுதி வரச் சொல்லிவிடுவார்.

ஒரு பாடம் நடத்துவார். மறுநாள் அதற்கு கேள்வி பதில் எழுத வேண்டும். அந்தச் சமயத்தில் தினமும் எழுதுவது என்றால் வேப்பங்காய்தான். எழுதவே மாட்டேன். எனக்கு நான்கைந்து பேர் நண்பர்களாக இருந்தார்கள். தெள்ளவாரிகள். தினமும் அடி வாங்குவோம். எத்தனை நாளைக்குத்தான் அடி வாங்கித் தொலைவது? சுள் சுள்ளென்று வலிக்கும். அதுவும் மர ஸ்கேல் ஒன்றை வைத்திருப்பார். குனிய வைத்து முதுகில் சப் சப்பென்று வீசுவார். கண்டபடி சாபம் விட்டுக் கொண்டே முதுகைக் காட்டிக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த டீச்சரிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. அடித்துவிட்டு வெளியே துரத்திவிடுவார். ஆடுகளத்திற்கு ஓடிவிடுவோம். கொஞ்ச நேரம் அவரைத் திட்டிவிட்டு கில்லி விளையாடத் தொடங்கிவிடுவோம். இப்படியே இந்த வருடத்தை ஓட்டிவிடலாம் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தோம்.

வா. மணிகண்டன் அவர்களின் நம்பிக்கை மாறிய கதையை இங்கு படிக்கவும்.
http://www.nisaptham.com/2014/10/blog-post_28.html

வா. மணிகண்டன் அவர்களுக்கு சமூக அறிவியலில் ஒரு சிலம்புச் செல்வி மாதிரி என் அக்காவுக்கு அறிவியலில் ஒரு பெயர் மறந்துவிட்ட டீச்சரும், கணிதத்தில் மெர்சி டீச்சரும், ஆங்கிலத்தில் நடராசன் சாரும். தமிழும் சமூக அறிவியலும் கொஞ்சம் ஒப்பேறிவிடும். ஆனால் மற்ற மூன்றிலும் அமைந்த ஆசிரியர்களும், ‘

பொம்பளப்பிள்ளை, கண்ணு தெரியாம போனா கஷ்டம். அதனால கண்ணை மட்டும் விட்டுடுங்க, மத்தபடி தோல உரிச்சாலும் பரவாயில்ல, இவள படிக்கவையிங்க’ என்று சொன்ன பெற்றோரும் செய்ய சதிவலைகளால் (ஆமாம்.பன்மையில்தான் சொல்லவேண்டும்) இன்று அவள் வாழ்க்கை அமோகமாக இருக்கிறது.

அன்று ஆசிரியர்களுக்கு இருந்த தொழில் சுதந்திரம் இன்று இல்லை என்பதோடு மட்டுமல்ல, பயந்தபடியே தங்கள் ஆசிரியப்பணியை செய்யவேண்டியதிருக்கிறது. எந்தப் பெற்றோர் காவல்துறையில் கம்ளைண்ட் கொடுப்பார்கள், எதற்காகவெல்லாம் கம்பி எண்ணவேண்டியிருக்குமோ என்று. எனவே அவர்கள் ‘பாப்பாத்தி, மாட்ட மேய்ச்சிட்டேன், கட்டினா கட்டிக்கோ’ கதையாக கரும்/வெண்பலகையில் எழுதிபோட்டுவிட்டு எழுதிக்கோ. டியூஷன் போனாப் போ போகாட்டி விடு என்று விடுகிறார்கள். கல்வித்துறையும் பத்தாங்கிளாஸ் வரைக்கும் கம்பல்சரி பாஸ் என்று தண்ணி தெளித்துவிடுகிறார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளை ‘வாங்கோ போங்கோ’ என்று அழைத்து ‘அந்த மிஸ் திட்டினாளா? கம்ப்ளைண்ட் கொடுத்திடலாம்’ என்று கூலாகப் பழக்குகிறார்கள். இதன்மூலம் குழந்தைகளின் தன்னம்பிக்கை அளவு, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் நிச்சயமாகவே தற்போது குறைந்துள்ளது.

எப்படி இதைக் கணக்கிடமுடிகிறது என்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12 வகுப்புத் தேர்வு முடிவுகளின்போது வெளியாகும் மாணவர்களின் அதிகரிக்கும் தற்கொலை விகிதாச்சாரத்தைப் பாருங்கள், புரியும்.

சதிகாரர்களால் நிரம்பிய அன்றைய ஆனந்த உலகம் மீண்டும் வருமா? ம்ஹும். வாய்ப்பேயில்லை.

Advertisements

One thought on “சதிகாரர்களால் நிரம்பிய ஆனந்த உலகம்

 1. நண்பரே,

  எப்படித் தவறினேன் என்று தெரியவில்லை….
  நீங்கள் வலைப்பதிவு துவங்கி இருப்பதை
  இவ்வளவு நாட்களாக கவனிக்கத் தவறி விட்டேன்..

  இது குறித்து –
  நானே உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்க வேண்டுமென்று
  நினைத்திருந்தேன் – உங்கள் ரசனைகளை முழுவதுமாக அறிய
  உங்களையே ஒரு வலைப்பதிவு துவங்கச் சொல்லி …

  நல்ல வேளை -கேட்பதற்கு முன் பார்த்து விட்டேன்.

  பிரமாதம்… உங்கள் ரசனை எனக்குப் பிடித்திருக்கிறது.
  இனிதே தொடர வாழ்த்துக்கள்.

  -காவிரிமைந்தன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s