எல்லைக்கோடுகள் ஜாக்கிரதை

இன்று காலையில் பேருந்தில் என் பின்னிருக்கையில் இருந்த இரு பெண்கள் தங்கள் கருத்தைக் கவர முயன்றவனைப் பற்றி பேசிக்கொண்டு வந்தார்கள்.

‘ஏய். அவன் என்னை ரோஸ் மாதிரி இருக்கன்னு சொல்றான்டி.’

‘பாத்து சூதானமா இரு. அவன்பாட்டுக்கு வண்டு மாதிரி தேன்குடிச்சிட்டு பறந்திறப்போறான்’

இதுவரை நானும் அவர்கள்பேச்சில் கவனமில்லாமல் தான் இருந்தேன்..முன்னவள் சொன்னாள் பாருங்கள் ஒரு பதில். நான் ஷாக்காகிவிட்டேன். பெண்களை பூவென்று எண்ணி ஏமாறாதீர்கள் கண்களே.

 ‘ஏய் இவனையெல்லாம் சைட் தாண்டி அடிக்கலாம். கட்டிக்கிட்டு வாழ எல்லாம் முடியாது. பாக்கதான் அழகா இருப்பான். உள்ள எல்லாம் சொத்ததான். அதனால அவன்ட்ட சொல்லிட்டேன். பாக்குறதோட நிறுத்திக்கோ. மத்தது எதையும் எதிர்பார்க்காதேன்னு.

பெண்ணும் பூவும் ஒன்றா? ஆணும் வண்டும் ஒன்றா? அடிப்படைத் தகுதியே ஒப்புக்குக் கூட சரியாய் இல்லையே? பேருந்துக் குலுக்கலில் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கிக்கொண்டுவந்து, இங்கே வடித்திருக்கிறேன். இந்தக் கவிதைக்கு நன்றிசொல்ல விரும்பினால் அந்தப் பேருந்துப் பெண்ணுக்குத்தான் சொல்லவேண்டும்.

Honey-Bee-

என் வர்ணத்தால்
நறு மணத்தால்
கவரப்பட்ட
இறக்கையாரே
என்னைச்சுற்றி சுற்றிவிட்டு
என்னைநீங்கி விட்டோடு

பார்வை பார்வையோடு
மட்டும்தான் இருக்கவேண்டும்
எல்லைக் கோடுகள்
ஜாக்கிரதை
நீயும் கோட்டைத் தாண்டாதே
நானும் கோட்டைத் தாண்டமாட்டேன்

என் சூலகத்தில்
எந்த மகரந்தம்?
என் மகரந்தம்
எந்தச் சூலகத்தில்?
நான்
தீர்மானித்துக் கொள்ளுகிறேன்

இன்னும் என்னைப்
பூவென எண்ணாதே
ஈரறிவுப் புள்ளினமே
ஆறறிவுப் பெண்ணென்று
அறிவாயே
இடைத்தரகே.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s