அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதிலும் கூன் குருடு செவிடு நீக்கிப் பிறத்தல் அரிது – ஔவையார்.

மாலை நான்குமணி வாக்கில் அலுவலகத்திலிருந்து கிளம்பினேன். அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாணவ மாணவிகள் கூட்டம். பேருந்துக்காக காத்திருக்கும் பெருங்கூட்டம். அவர்கள் விளையாட்டாய் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆம். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத புரியாத விளையாட்டு.  மிகவும் அதிர்ச்சி.

அதில் பெரும்பாலான மாணவிகள் நண்பிகளின் கண்ணிமையை பிடித்து இழுத்து விளையாடுவதாகச் சண்டையிட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். கண் மேல் இமையில் சில நுண்ணிய சுரப்பிகளும் பல நரம்புகளும் உள்ளன. இவற்றில் ஏதேனும் தீங்கு விளையுமானால் பார்வையே பறிபோகும் அபாயமும் உள்ளது. மேலும் கண்ணைப் பாதுகாக்கும் அரணாகவும் இமைகள் உள்ளன. இத்தகைய பாதுகாப்பு உறுப்பை இன்றைய இளைய தலைமுறையினர் மிகவும் சர்வசாதாரணமாக கையாளுவதைப் பார்த்து அச்சமாகத்தான் உள்ளது.

eyeliddry_eye_label_v3_450

இன்னும் சில மாணவர்கள், அவர்கள் ஆண்கள் அல்லவா? எனவே அவர்கள் பெலனுக்குத் தகுந்தாற்போல. ஒருவன் மற்றொருவனின் பிடரியில் ஓங்கி அடிப்பதுபோலக் கைகளைக் கொண்டுசென்று அடிக்கிறான். பிடரி உடல் இயக்கத்தின் மையம். அங்குபோயா விளையாடுவது?

cat scruff

overviewEarStruc-L

இன்னொருவன் ஒரு மாணவனின் பின்புறம் இன்னொருவன் பதுங்கிவந்து இருகைகளையும் அகற்றி அவனுடைய இருகாதுகளிலும் அடித்தான். ஒருவேளை பலமில்லாத அடியாகக் கூட இருக்கலாம். ஆனால் காது எவ்வளவு முக்கியமான உறுப்பு மனிதனுக்கு.

காது கேட்காத உலகை எண்ணிப்பார்த்தால் எவ்வளவு கொடுமை? காதில் எவ்வளவு நுண்ணிய எலும்புகள், சதைகள், சவ்வுகள், திரவங்கள். சிறிய இடமாறுதல்கூட காதின் செயல்பாட்டை நிறுத்திவிடும். அதுமட்டுமல்லாமல் மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்கள் அருகில் இருக்கின்றன. சடிதியில் அவற்றுக்குள் ஏதேனும் காற்றுக்குமிழி உருவாகிவிட்டால் அந்த மாணவனின் கதி என்ன? அவனை நம்பி உள்ள பெற்றோரின் கதி என்ன? எதைப்பற்றியும் கவலைப்படாமல் சினிமாவில் கிராபிக்ஸ் மூலம் காட்டப்படும் இந்தச் சண்டைகளை உண்மையென்று நம்பி ……. கடவுளே? ஏன் தான் இந்தச் சோதனைகளோ இன்றைய பெற்றோருக்கு?

எந்த அளவுக்கு இன்றைய தலைமுறை மனித உடல், அமைப்பு, பற்றிய அறிவோ செயல்பாடுகள் பற்றிய தெளிவோ இல்லாமல் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

அனாட்டமி, அலோபதி பற்றி பரவலாகத் தெரியாதபோதும் வர்மம், சித்தா, மூலிகை பற்றித் தெரிந்த நமது பெற்றோர் அல்லது பாட்டனார் காலத்தில் இவற்றையெல்லாம் விளக்கமாகச் சொல்லித்தராவிட்டாலும் இங்கெல்லாம் தொட்டுவிளையாடக்கூடாது. ஏதாவது படாத இடத்தில் பட்டு விடும் என்று ஆரம்பத்திலேயே கண்டித்து விடுவார்கள். நாமும் ஏன் எதற்கு என்று வினவினாலும் வினவாவிட்டாலும் பதில் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கூட கீழ்ப்படிந்துதான் இருந்தோம். அதனால் ஏதாவது கெட்டுப்போய்விட்டதா? இல்லையே. ஆனால் இன்றைக்கு உள்ள குழந்தைகளுக்கு இவையெல்லாம் தானாகத் தெரிவதுமில்லை, பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடமிருந்து தெரிந்துகொள்ளும் ஆர்வமுமில்லை, மூத்த தலைமுறையினருக்குக் கீழ்ப்படியும் எண்ணமுமில்லை.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு உடல் அமைப்பு, அவை செயல்படும் விதம், உறுப்புகளின் உபயோகம், அவை இல்லாதவர்கள் படும் பாடு இவற்றைக் கொஞ்சமாவது விளங்கவைக்கப் பாருங்கள். நன்றாக இருப்பவர்களை நீங்களே அங்கஹீனமாக்கி அவதிப்படாதீர்கள்.

எப்படி ஆரோக்கியமான தலைமுறை விளையும்? தங்களைத்தாங்களே கெடுத்துக்கொள்ளும் இவர்கள் இதையெல்லாம் எங்கேயிருந்து கற்கிறார்கள்? யார் சொல்லித்தருகிறார்கள்? திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் தான்.

திரைப்பட தொலைக்காட்சி சண்டைக்காட்சி இயக்குநர்களே, கொஞ்சம் பொறுப்போடு இந்த மாணவ சமுதாயத்தை அணுக வேண்டுகிறேன். ஏனென்றால் உங்கள் பிள்ளைகளும் இங்கேதான் படிக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s