கேள்வி பிறந்தது அன்று, (நல்ல) பதில் பிறந்தது இன்று.

நண்பர் காவிரிமைந்தன் அவர்கள் தங்கள் கேள்வியினால் எனது சிந்தனையைக் கிளறியிருக்கிறார். நன்றி.

quotes-quality-questions_14757-3

//நட்பின் விதை தனக்கு ஏற்ற இடத்தில் விழவேண்டும். விழுந்த அந்த நிலமாகிய மனம் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இருக்கவேண்டும். பின்னர் தேவையான காரணிகள் அனைத்தும், அனைத்தும் என்றால் அனைத்துமே – சரியாய் இருந்தால் வளரும். பின்னர் அது நல்ல பலனைத் தரும்.//

நட்பு தோன்றுவதற்கும் வளர்வதற்கும் ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்படவேண்டுமா என்ன? பார்த்துத்தான் பழகவேண்டுமா? பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பை விட வேறு உதாரணம் வேண்டியதில்லை.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

இல்லையா?

ராம் மோகன் சில வருடங்களுக்கு தன் மனைவி இறந்த துக்கத்தை தாங்கியும் அதை மறக்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார். 2008 என்று நினைக்கிறேன். இதில் தன்வாழ்வை முடித்துக்கொண்டது தவறானது, அது இங்கே முக்கியகருத்து இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் எவ்வளவாக நட்புடன் இருந்திருந்தால் ( இதையே கருத்தொருமித்து அன்புடன் என்றும் சொல்லலாமா? ) என்பதை இந்த ஒரு விளிம்புநிலை முடிவுக்குப் போயிருக்கக் கூடும். இந்த ராம்மோகன், ஸ்டெல்லா புரூஸ் என்று அறியப்பட்டவர். வேறு சரியான நட்புக் கிடைத்திருந்தால் கருத்துப்பகிர்தலின் துணை கிடைத்திருந்தால் அவர் இன்னும் சில ஆண்டுகள் அதிகமாக இருந்திருக்கக் கூடும்.

மனிதனுக்கு 40-50 வயது என்பது அத்தனை ஆண்டுகளால் ஆன சமுதாயத்தால் நல்லது என்றோ கெட்டது என்றோ வரையறுக்கப்பட்ட அனுபவத்தைத் தருகிறது. இந்த அனுபவம் ஒரு தெளிவைத் தரவேண்டும். ஆனால் சமூகத்தின் சந்தேக விலங்கு இந்த ஹோமோ செப்பியன்ஸ்.

40-50 வயதுக்கு மேல் உண்டானாலும் நட்பின் விதை புதியதுதானே. புதிய பயிர், புதிய விளைச்சல். பின்னும் ஏன் களை? நட்பின் விதையைத் தூவ, தனக்கு ஏற்ற இடத்தை தேர்ந்தெடுப்பதில் உண்டாகும் சந்தேகம். இந்த சந்தேகம் இதுநாள்வரை வாழ்ந்த அனுபவங்களினால் உண்டாவது. சந்தேகத்தின் பலனை நண்பனாக வந்த எதிராளிக்குத் தந்துவிடுகிறது.

இந்த அனுபவம் உங்களுக்கு மட்டும் இல்லை, உங்கள் நண்பர்களாக மாற முயன்ற மற்றவர்களுக்கும் இருக்கக்கூடும் என்றே கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் நினைத்தமாதிரி நீங்கள் இருக்கவில்லையே. எனவே அவர்கள் உங்களை ஏமாற்றியதுபோக நீங்கள் அவர்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்றும் கொள்ளலாம்.

// இந்த வயதில், இந்த நட்பால் என்ன பயன் கிடைக்கும் என்று யோசித்து தான் நட்பையே தொடர்கிறார்களே – அனுபவித்திருக்கிறீர்களா …? //

சுயநலம். இவர்கள்,

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

ஆனால் நண்பர் என்று on the other end இல் இருப்பவர் இவரைப் புரிந்துகொண்டால், இவர் குணம் இப்படித்தான் புரிந்துகொண்டால் வருத்தம் வராது.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

அல்லவா?

—————

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

இதை எனக்குரிய ஒரேஒரு “condition apply” rule ஆக வைத்திருக்கிறேன்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s