விமரிசனம் தள நண்பர்களுக்கு,
கேசவ்ஜியின் கார்ட்டூன் என்ன சொல்லக்கூடும் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளோம். ஆனால் அவர் என்ன நினைத்து அதை வரைந்துள்ளார் என்று அறிய ஆவல்.
அதனால் வந்த விளைவு,
விவசாயம்.
இந்தியா ஒரு விவசாய நாடு.
இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது.
விவசாயி சேற்றில் காலை வைக்காவிட்டால் நாம் சோற்றில் கையை வைக்கமுடியாது.
இவையெல்லாம் வெறும் பழமொழிகளாகப் போய்விடாமல் காக்கவேண்டிய பொறுப்பு இந்தியக்குடிமகன் ஒவ்வொருவனுக்கும் இருக்கும்போது, மோடிஜிக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?
தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது காங்கிரசுக்குக் கொடுத்த மறுப்புகள் எல்லாம் மறந்துபோய்,
ஆளுங்கட்சியாக ஆனபின்பு,
- ஏகப்பட்ட அமெண்ட்மெண்ட்கள்
- இந்தத்தலைமுறையில் வயிறுகாய்ந்த விவசாயி என்ற மீனுக்கு தூண்டில்போடும் விவசாயநில விலை உயர்வு நாலுமடங்கு
- அடுத்ததலைமுறை இளையோர்களுக்கு ஆசைகாட்டும் 30கோடி மக்களின் வேலைவாய்ப்பு
எல்லாம் நினைவுக்கு வந்து
எப்படியாவது விவசாயநாட்டை தொழில்காடாய் மாற்ற உறுதிபூண்டுள்ள மோடிஜி அன் கோவிற்கு
நேரடிக்கேள்விகள்தான் கேட்கக்கூடாது என்று காதுகளை அடைத்துள்ளார்கள், கண்கள்வழியாக கார்ட்டூனாவது போய்ச் சேரும் என்ற நம்பிக்கையுடன் கார்ட்டூனைத் தந்துள்ள கேசவ்ஜிக்கு நன்றி.
…………..
இதையெல்லாம் ஒருவேளை மத்தியஅரசு செய்தேமுடித்துவிட்டால் இன்னும் ஐந்துஆண்டுகள் அல்ல, பத்துஆண்டுகளுக்குப் பின்பு ,
கார்பன்டை ஆக்ஸைடைச் சுவாசித்து, கடனில்மூழ்கும் கிரெட்டிக்கார்டைச் சாப்பிட்டு, பிளாட்பார்மில் குடியிருப்பார்களா இந்தியக் குடிமகன்கள்.
மக்களே! உங்களுக்காகவும், உங்கள் தலைமுறைக்காகவும் சிந்திப்பீர்.
The irreversible effect ! 😦