92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில் ஏமாறுவாரா என்ன …?

என்னைப் பொறுத்தவரை

மு.கருணாநிதியின் சாணக்கிய மூளை வயதின்காரணமாக துருப்பிடித்துப்போய்விடவில்லை.
அனுபவத்தின் காரணமாக இன்னும் மெருகேறி இருக்கிறது என்றே சொல்லுவேன்.

 1.  2016 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு ஜெஜெ-மதுவிலக்கை அமல்படுத்தினால் விளைவு என்னவாக இருக்கும்?

அ. அதிமுகவுக்கு பெண்களின் ஓட்டு கணிசமாகக் கூடலாம்.

கவனிக்கவும் : கணிசமாகத்தான் –

இன்றைக்கு வருமான அடிப்படையில் பெரும்பாலான லோயர் மிடில் க்ளாஸ் பெண்களின் மனநிலை – புருஷன் குடித்தாலும் பரவாயில்லை, கொஞ்சமாக் குடிக்கட்டும், குடித்தாலும் பரவாயில்லை, குடிச்சுட்டு வீட்டுக்குள்ள கம்முன்னு இருக்கட்டும், ரோட்டுல போய் சலம்பல் பண்ணக்கூடாது மாதிரித்தான்.

லோயர் கிளாஸ் வருமானத்தில் உள்ள பலபெண்கள் – பெண்களே கடையில் வாங்கிவந்து வீட்டில் குடிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வேலை அலுப்புத் தீர, வேற என்னதான் எங்களுக்கு இருக்குது போன்ற இத்துப்போன காரணங்கள். எனவே இந்த இரு வகுப்பில் வரும் பெண்களின் ஓட்டுக்கள் அதிமுகவுக்கு விழ வாய்ப்பில்லை.

மிடில் க்ளாஸ் வருமான வரம்பில் வரும் பெண்களும் தங்கள் கணவரைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட முதல் நிலை போன்றே எண்ணம் கொண்டிருந்தாலும், குடிக்காவிட்டால் பரவாயில்லை, ஆனால் ஒரு கல்யாணம், காய்ச்சி, விசேஷம்னா குடிச்சாத் தப்பில்லை என்ற மனோபாவத்தோடுதான் உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரையும் குடித்தால் தப்பில்லை. ஆனால் கட்டுக்குள் இருக்கவேண்டும். அவசியப்படும்போது குடிக்கவேண்டும்.

அப்பர் மிடில் க்ளாஸ் பெண்கள் சொல்லவேவேண்டாம். சமுதாயத் தகுதி….இன்னபிற

இந்த எல்லாவகுப்புப் பெண்களிலும் கணவன் குடிக்கவேண்டாம் என்று கருதுபவர்கள் ஒட்டுமொத்த தமிழ்ப்பெண்களில் 40 சதவீதம் பேர் தேறுவார்கள். ஆனால் 40 பெரிதா 60 பெரிதா?

போகட்டும், இந்த 40% பெண்களின் ஓட்டு அதிமுகவுக்குப் போனால் போகட்டும், மீதி அறுவது நமக்கு.

 1. 2016 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு ஜெஜெ-மதுவிலக்கை அமல்படுத்தினால் ஆண்களின் பாதிப்பு என்னவாக இருக்கும்?

குடியை விரும்பாத குடியை ஒரு பொருளாக மதிக்காத ஆண்களின் சதவீதம் எத்தனை தேறும். நான் என்று என்னைப் பற்றி நினைக்கும்பொழுதே நம் ஆண் நண்பர்களை கவனித்துப் பாருங்கள். எனக்கு 10 நண்பர்கள் இருந்தால் அதில் ஒருவர் மொடாக்குடியர். 3பேர் தினமும் வீட்டுக்குள். 5பேர் எப்பொழுதாவது ‘பார்ட்டி வை’ ரகம். மீதி 2 எனக்குத் தெரிந்த வரை ‘குடியை விரும்பாத / குடியை ஒரு பொருளாக மதிக்காத’ ரகம். இதிலும் 20சதவீதம் ஆண்கள்தான் தேறுவார்கள்.

போகட்டும், இந்த 20% ஆண்களின் ஓட்டு அதிமுகவுக்குப் போனால் போகட்டும், மீதி எண்பது நமக்கு.

 1. குடிப்பது தீமை என்று காலங்காலமாகத் தெரியாத விழிப்புணர்வை ஏற்படுத்தாத பட்சத்தில், அல்லது அப்படிப்பட்ட விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படாத பட்சத்தில் குடிக்கத்தான் செய்வார்கள். அது டாஸ்மாக்கில் விற்றாலும் சரி, கள்ளச்சாராயமாகக் காய்ச்சினாலும் சரி. இப்பொழுதே சாராயம் இல்லாமல் வேறு என்ன ஐட்டங்களில் போதை ஏறும் என்று பள்ளிக்குழந்தைகள் முதல் வயதான பெரியோர் வரை தெரிந்திருக்கிறது. உதாரணம் வேண்டுமென்றால் தனித்தகவலில். நமக்குத் தெரியவில்லை என்றால் நாம் தான் அறிவிலிகள்.

தேவை என்பது மனிதனின் கண்டுபிடிப்புகளுக்குத் தாய். அதைத்தான் மனிதன் செய்துகொண்டிருக்கிறான்.

இன்றைக்கு மது இல்லாத இரு நண்பர்கள் சந்திப்பு அருகிவருகிறது. வியாபார சந்திப்புகள், சிறுகூட்டம், பெருங்கூட்டம், கல்யாணங்கள், விருந்துகள், காதணி, மஞ்சத்தண்ணி, அரசியல் கூட்டம் ….. எங்கே இல்லை மது. .. நிச்சயமாக ஆண்களில் பெரும்பாலோர் ஓட்டு அதிமுகவுக்குக் கிடையாது. எண்பத்து சொச்சம் ஓட்டுக்கள் நமக்குத்தான்.

 1. இந்தக் கணக்கெல்லாம் ஜெஜெக்குத் தெரியாதா? அல்லது சொல்லாமல் விடுவார்களா கழககண்மணிகள். எனவே மிடாஸின் வருமானத்தைக் கணக்கில்கொண்டு, அரசு இயந்திரத்தின் வருமானத்தைக் கணக்கில்கொண்டு அம்மையார் மதுவிலக்கை கொண்டுவரமாட்டார் என்று முக எண்ணுகிறார்.

ஒரு வேளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். அதையும் அதிமுக அரசில் அராஜகம் பாரீர் என்று ஓட்டாக கன்வெர்ட் பண்ணலாம்.

 1. அதையும் மீறி ஒருவேளை ஜெஜெ மதுவிலக்கை அமல்படுத்தினால் — முதலில் சொன்ன அறுபது சதவீதப் பெண்கள், எண்பது சதவீத ஆண்கள், தன்கையே தனக்குதவி என காய்ச்சிக் குடிக்கும் குடிகள், போன்றோரின் ஓட்டுக்கள் அதிமுகவுக்குக் கன்பர்மாக கிடையாது. எனவே ஜெஜெ 2016ல் தோல்வி. அதேவேளையில் தான் அறிக்கைவிட்டதால்தான் அம்மையார் தனக்குப் போட்டியாகத்தான் மதுவிலக்கை அமல்படுத்தினார் என தனக்குத் தானே சந்தனத்தைத் தடவிக்கொள்ளலாம்.
 1. பாமக அன்புமணிக்கு ஸ்டாலின் முன்னர் சொன்ன பதிலே இப்போதும் சொல்லுவார் என நினைக்கிறேன். எனக்குத் தகுதியான ஆளுக்குத்தான் பதில் சொல்லுவேன் என்று. பாமக, கட்சி மீட்டிங்குகளைப் பார்த்தால் பெண்களே குடித்துவிட்டுத்தான் வருகிறார்கள். இது பாமக என்று இல்லை, எல்லாக் கட்சிகளின் தொண்டர்கள் நிலையும் இப்படித்தான். இது எல்லாக் கட்சித் தொண்டர்களுக்கும் தெரிந்த விசயம்தான். எனவே அரசியலில் அவர்கள் இன்னும் பாலகாண்டத்தில்தான் உள்ளார்கள்.

எனவே

தேர்தலுக்குமுன் ஒருவேளை ஜெ.மதுவிலக்கை அமல்படுத்தினால் 2016ல் பெருவாரி ஆண்களின் ஓட்டுக்கள் பிளஸ் தன்னால்தான் ஜெ அமல்படுத்தினார் என்ற பெயர்

அமல்படுத்தாவிட்டால் நான் வந்தால் அமல்படுத்துவேன் என்ற வாய்ஜாலம் பிளஸ் இதையே சொல்லிக்கொண்டிருக்கும் பாமகவுக்கு ஒரு செக்மேட் என்ற அளவில்தான் இதை எடுத்துக்கொள்ளவேண்டும் (2016 தேர்தலுக்கு திமுகவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான எந்த தேர்தல் வாக்குறுதியும் இல்லை என்பது ஹைலைட்). மற்றபடி பாமக ஆற்காடு மாவங்களைத்தாண்டி தென்தமிழகத்தில் ம்ஹூம்… வாய்ப்பேயில்லை. முதல்வராகும் கனவு காண யாருக்குத்தான் விருப்பமில்லை…

 •  முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை நிறுத்துங்கள் என்று வலுச்சண்டைக்கு இழுக்கிறார் அன்புமணி. அப்பொழுதும் கூட, முதல்வராக விருப்பம் இருந்தும்கூட அதற்கான வேட்பாளராகக்கூட முடியாமல் ஸ்டாலின்.
 •  நான் முதல்வராகவே மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்று நழுவும் ஓபிஎஸ். நான் வரும்வரை நீதான் முதல்வர் என்று இழுத்துஉட்காரவைக்கும் ஜெஜெ.
 •  உன் வீட்டில் இருந்து அரிசி எடுத்துவா, நான் உமி எடுத்துவருகிறேன், எல்லோரும் கூடி கலக்கி, ஊதி ஊதி சாப்பிடுவோம் என்று இன்னொரு கூட்டம் திருமா தலைமையில்..
 •  எத்தனை அடித்தாலும் ஸ்டெடியாக ‘முதல்வர் நான் தான்’ , யார்வேண்டுமானாலும் கூட்டணிக்கு வாங்க என்று சிங்கப்பூருக்கு டிக்கெட்போடும் விஜயகாந்த்.
 •  யார் வந்தாலும் பரவாயில்லை போனாலும் பரவாயில்லை, அன்னப்போஸ்டாக எங்கள் முதல்வர் நீங்கள்தான் என்று பெரும்பாலான மக்கள் சொல்லும் ஜெ…

சொல்லும் என்ன சொல்லும்? ஆர்கே நகர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நினைத்திருந்தால் இ்ப்போது போடும் இந்த மதுவிலக்கு ஸ்டண்டை அப்போதே போட்டு அட்லீஸ்ட் ஜெஜெ என்ற தனிமனுஷியை – அவர்கள் அகராதியின்படி – குற்றவாளியை எதிர்த்து நின்றிருந்தால் தோற்கடித்திருந்தால் – இன்றைக்கு அவர் முதல்வரே இல்லை. ஓபிஎஸ்ஸோ அல்லது வேறுயாரோதான்.

அதைச் செய்யத்தவறிவிட்டார் முக. அதுதான் அவர் விட்ட சீட்டு.

மற்றபடி இப்போதைக்கு அவர் சரியான கார்டைத்தான் போட்டிருக்கிறார்.
அன்புமணி ஆட்டத்தில் இருந்தாலும்கூட அவரால் ஒரு சீட்டையும் பெறமுடியாத ஆட்டம் இது.

ஜெஜெ செயல்படமுடியாத அளவுக்கு ஒரு நுட்பமான சீட்டு.
உண்மையில் ஜெஜெ.. முகவிடம் சாணக்கியத்தனம் கற்கவேண்டும்.
இப்படியே போனால் 2016ல் மு.க.வே முதல்வராகக்கூட வாய்ப்பிருக்கிறது.

இறுதியாக:

மது என்பது போதையூட்டும் ஒரு வஸ்து என்ற அடிப்படையில், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை.. டாஸ்மாக் வேண்டுமானால் கட்டுப்படுத்தப்படலாம், வேறுபெயர்களில் வரலாம், இல்லாமலேயே போகலாம். ஆனால்

மது என்பது போதையூட்டும் ஒரு வஸ்து என்ற அடிப்படையில், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. அப்படிச் சொன்னால் அது வெற்று அரசியல்தான்.

அம்மா விசுவாசிகளுக்கு ஒரு விண்ணப்பம்,

லாட்டரியை அடியோடு ஒழித்தவர் அம்மாதான் என்று யாராவது அம்மா விசுவாசிகள் வருவீர்களானால், அண்டை மாநில எல்லையில் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த வியாபாரம் பற்றித் தெரியவில்லை, இதனால் அழியும் குடும்பங்கள் பற்றித் தெரியவில்லை என்றுதான் பொருள். 1ரூபாய், 5ரூபாய், 10 ரூபாய் லாட்டரியை ஒழித்துவிட்டார் எங்கள் அம்மா என்று சொல்பவர்கள், கார்ப்பரேட் அளவில் எல்லா செயல்களுக்கும் பெட் பற்றி, கிரிக்கெட் சூதாட்டம் பற்றி, இவ்வளவு ஏன் சொத்துக்குவிப்பு வழக்கின்போது விடுதலையா இல்லையா என்பது பற்றிக்கூட சூடாக நடந்த பெட்கள் பற்றித் தெரியவில்லை என்றுதான் பொருள். ..

 ஒரு ‘குடி’மகன் தரப்பில், அவன் குடும்பம் தரப்பில் சில நியாயமான வாதங்கள்:

அதை மு.க. ஆரம்பிப்பதற்கு முன்பு தென்னங்கள், பனங்கள், சாராயம், ஊறல், சுண்டக்கஞ்சி என்று பலபெயர்களால் வழங்கப்பட்டு, பின்னர் உறை, பாக்கெட் சாராயம், கள்ளச் சாராயம் என்று பல பரிமாணங்களில் வளர்ச்சியடைந்தது. இதனால் பல தனியார் முதலைகள் தாம் கொழுத்ததோடு விற்பனை அதிகரிக்க என்று அதிகபோதை, விஷம் என்று கலந்து பயனாளிகள் சாகநேர்ந்ததால் முதலைகளையும் பயனாளிகளையும் கட்டுப்படுத்த அரசே ஏற்று நடத்தியது.

இத்தனை ஆண்டுகளாகக் குடித்து வெறித்து தன் கவலைகளை தினந்தினமும் மறந்துகொண்டிருந்தவனுக்கு திடீரென்று கிடைக்காவிட்டால் அந்தத் தனிமனிதன் என்ன ஆவான் என்று யோசித்துப்பார்க்கவே முடியவில்லை.. அத்தகைய மோசமான உடல்உபாதைகள், ஆரோக்கியக் குறைபாடுகள் மனநிலை பிறழ்வுகள் ஏற்படும். அவற்றையெல்லாம் சமாளிக்குமளவுக்கு அந்தத் தனிமனிதனின் குடும்பம் உற்றார் உறவினர் தயாராக இருப்பார்களா? அட்லீஸ்ட் எதிர்பார்த்திருப்பார்களா? அதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கும், அல்லது எடுக்கத் தயாராக இருக்கும்? விரிவான திட்டங்கள் உண்டா?

Advertisements

7 thoughts on “92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில் ஏமாறுவாரா என்ன …?

 1. நண்பர் டுடேஅண்ட்மீ,

  எப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள்….!!!

  அதான் – மனம் இருந்தாலும், ஒரு தீர்மானத்திற்கும்
  வர முடியாமல் மீண்டும் மீண்டும் முடிவு
  தள்ளிப் போடப்படுகிறது.

  எவ்வளவு காரணங்கள் இருந்தாலும் –
  நான் மதுவிலக்கு வேண்டும் என்று சொல்லும் மனிதன்.
  வேண்டுமானால் –
  Existing liquor addicts -க்கு மட்டும் ஒரு ID card
  கொடுத்து, அவர்களுக்கு மட்டும் ரேஷன் மாதிரி கொடுக்கலாம்.

  குறைந்த பட்சம் எதிர்கால – குழந்தை குடிகாரர்களையாவது
  நாம் தடுத்தேயாக வேண்டும்.

  உங்கள் விவரமான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • ஜி,
   நானும் போதைக்கு எதிர்தான். ஆனால் அதைப் இதுவரை பயன்படுத்தியவர்களுக்கும் நம்மைப்போன்ற மனிதர்கள்தானே. அவர்களையும் மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும் என்கிறேன்.

   குடி கெட்டதுதான், ஆனால் குடிகாரர்கள் கெட்டவர்கள் இல்லை.

   முற்றிலும் அவர்கள் வெளியே வரத்தேவையான சூழலை அந்த மனிதன், அவன் சார்ந்த குடும்ப உறவுகள், சமூகம், அரசாங்கம் இணைந்து செய்ய முயன்றால் மட்டுமே இது சாத்தியம்.

   உங்கள் பதிலுக்கு நன்றி.

 2. மிக நல்ல பகுத்தாய்வு. கலைஞரின் கதை வசனத்துக்கு பாராட்டுக்கள்.

  2. பூரண மது விலக்கு என்பது இன்னும் சில ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை
  தான்.

  3. 1952 – 1971 இருபது ஆண்டுக் காலத்தில் கீழ் தட்டு மற்றும் நடுத்தட்டு பிரிவினர் கிடைக்காததானாதளால் குடிக்கவில்லை; குடிப் பழக்கத்தை துவங்கவில்லை. கள்/கள்ளச் சாராயம் கிடைக்கும் போது கொஞ்சம் பயத்துடன் குடித்தனர்; புதுவை/கேரளா/ஆந்திர எல்லை பகுதிகளில் வசிப்போர் எப்போதாவது எல்லை தாண்டிப் போய் தயக்கத்துடனும், பயத்துடனும் கொஞ்சம். சமூகத்தின் பார்வை குடிப்பதை கீழ் தரமாக மதிப்பிட்டது. அதன் தாக்கம் மிக அதிகம். தேவ தாஸ், புனர் ஜன்மம், நவராத்திரி,குடியிருந்த கோயில் நீதி, என்று விரல் விட்டு எண்ணக்கூடிய திரைப் படங்கள்; பிற படங்களில் வில்லன்கள் குடிப்பார்கள்! ஆகவே அந்தப் பழக்கம் பழகாத தலைமுறை.

  1971-க்குப் பிறகு நடுத் தட்டு மிகப் பெரிய அளவில் ருசி பார்க்கத் துவங்கியது. பழக்கம்/வழக்கம் ஆனது. பொருளாதார வளர்ச்சி நடுத் தட்டை விரிவாக்கியது. மது விலக்கு இல்லாத மாநிலங்களுக்கு போக்கு வரத்தும், அவர்கள் பெரிய அளவில் வேலைக்காக வருவதும் தங்குவதும்; அவர்கள் உடன் பணி புரியும் மற்றும் அண்டை வீடு எதிர் வீடு என்று இந்தப் பழக்கம் சகஜமாகக் கருதப்படும் அளவுக்கு பெருகியது. சமூகப் பார்வை மாறியது. , பின் வந்த படங்கள் கதாநாயகன் குடிப்பது தவறில்லை என்ற எண்ணம் கொடுத்தது. பதிவில் சொன்ன புள்ளி விவரங்கள் தோன்றின.

  சரி, இப்போது என்ன செய்யலாம்?

  1. கள்ளுக் கடைகளை திறக்கலாம். கீழ் மட்டத்திற்கு குறைந்த விலையில் களிப்பு.

  2. இப்போது பழக்கம் உள்ளவர்கள் பெர்மிட்டுடன் IMFL குடிக்கலாம் என்று விதிக்கலாம். புதிய தலைமுறைக்கு இதை மறுக்கலாம்.

  இன்னும் முப்பது முதல் ஐம்பது ஆண்டுகளுக்கு இதன் தாக்கம் இருக்கும்.

  கலைஞர் கணக்கை பிட்டு பிட்டு வைத்த பதிவு.

  • பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே.

   //சரி, இப்போது என்ன செய்யலாம்?//

   குடி கெட்டதுதான், ஆனால் குடிகாரர்கள் கெட்டவர்கள் இல்லை.

   முற்றிலும், அரைகுறையாக அல்ல,முழுவதுமாக அவர்கள் குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வரத் தேவையான சூழலை
   அந்த மனிதன், அவன் சார்ந்த குடும்ப உறவுகள், சமூகம், அரசாங்கம் இணைந்து செய்ய முயன்றால் மட்டுமே இது சாத்தியம்.

   அரசாங்கம் அவசரக்குடுக்கைத்தனமாக அரசியல் செய்யநினைத்தால்
   பின்விளைவுகளை மக்கள்-மக்கள் என்றால் குடிக்காத நீங்களும் நானும் இல்லை, உண்மையான ‘குடி’மக்கள்
   அவர்கள் குடும்பங்கள் எதிர்கொள்ளத்தயாரான நிலையை உருவாக்கவேண்டும்.

   இவ்வாறு ஒரு
   நீண்டகால
   குடிக்கு எதிரான
   விழிப்புணர்வு அளிக்கும் செயல்முறைத் திட்டத்தோடுகூடிய
   மதுவிலக்கே
   உண்மையில்
   சமுதாயத்துக்கு ஏற்புடையதாக இருக்கும்.

 3. வழி மொழிகிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s