இத்தனை நாள் ஏன் வாழவேண்டும்? ஒத்துவராத சரீரத்தை வைத்துக்கொண்டு.

இன்று ஒரு துக்க வீட்டிற்குப் போகவேண்டியிருந்தது. அலுவலகத்துக்குப்போனபின் தான் தெரியும் மரணம் நிகழ்ந்தது நேற்று இரவில் என்று. இயற்கையான மரணம். அவர் தன் அந்திமக் காலத்தில் இருந்தவர்தான். பலமுறை இவர் இறந்துவிட்டால் என்ன என்று உற்றார் நினைத்திருந்த நிலைதான். ஆனால் இன்னும் கொஞ்சநாள் ஒரு ஆறுமாதம் இருந்தால் பரவாயில்லை என்று நினைத்திருந்தவேளையில் மூச்சை நிறுத்திவிட்டார். பேரனுக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.

குடும்பத்தில் அனைவருமே நன்கு படித்தவர்கள், நல்ல தொழிலில் உள்ளவர்கள். நாகரிமானவர்கள், நகரங்களில் வாழ்பவர்கள். ஆனாலும் அந்தப்பெண்மணியை தன் மருமகள் மிகவும் கொடுமைப்படுத்திய சம்பவங்களை நேரடியாகப் பலவருடங்கள் பார்த்திருக்கிறேன். அதை மகன் கண்டுகொள்ளாமல் விட்ட தருணங்களையும் தாண்டியிருக்கிறேன். இவர்கள் தங்கள் அந்திமக் காலத்தில் என்ன ஆவார்கள் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

ஏன் இந்தப் பாட்டி அசைக்கவும்முடியாத தன் சரீரத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், வேண்டாத மருமகள் கையில் உணவு உண்ணவேண்டிய நிலை வந்திருக்கிறதே, என்னென்ன பாவம் செய்தாளோ இப்படி அனுபவிக்கிறாள் என்று பலர் என் காதுபட சொன்னதையும் அதைக் கேட்டு அந்தத் தாயின் கண்களில் நீர் வடிந்ததையும் செரித்திருக்கிறேன்.

இன்றைக்குப் போய் அந்த வீட்டிற்குள் நின்றபோது, கட்டிவைக்கப்பட்டிருந்த தாடையுடனும், கால்விரல்களுடனும் அந்தத் தாயைப் பார்த்தபோது, கைகளை கோர்த்தபடி வயிற்றின்மீது வைத்திருந்த நிலையையும் கண்ணாடிப்பெட்டிக்குள் பார்த்தபோது, என்னையறியாமல் அந்த மருமகளின் பக்கம் என் கண்கள் போய்விட்டது. அதற்குக் காரணம் ஒரு சம்பவம்: இந்த வயிற்றில்தானே என் கணவனைப் பெற்றாய் என்று ஏதோ வாய்ச்சண்டையில் அந்த வயிற்றிலேயே தன் கையால் ஒரு குத்துவிட்ட மருமகள், வீட்டில் சண்டை வேண்டாம் என தாயைத் தடுத்த தனயன்… எதிர்பாரா விருந்தாளியாய் நான்… இன்றளவும் என் கண்ணைவிட்டு அகலாத சம்பவம்.

அந்த அளவுக்கு மனைவிக்கு தன் கணவன்மீதான பொசசிவ்நெஸ்

கணவனுக்கோ, தன் குடும்பத்தின் மீதான மான/அவமான அளவுகோலின் மீதான பொசசிவ்நெஸ்

தாய்க்கோ வேறு வழி இல்லாத நிலை, மகனையும் விட்டுக்கொடுக்கமுடியாமல், மருமகளையும் கோபிக்கமுடியாமல்.. கண்ணில் நீரோடு இந்த உலகத்தின் மீதான பொசசிவ்நெஸ்

——-

இன்றைக்கு போய் துக்கம் விசாரிக்கப்போனால், எல்லாரும் மாய்ந்து மாய்ந்து சொன்ன விசயம், கடந்த ஒருமாதமாக ஒன்றும் சரியில்லை, உணவுகொடுப்பதிலிருந்து கடன்கள் கழிப்பதுவரை எல்லாக் காரியங்களையும் மருமகள்தான் தன் மாமியாருக்குச் செய்யவேண்டியிருந்தது. அதை அவர் அர்ப்பணிப்போடும் செய்தார் என்று….

——-

திரும்ப வரும்போது இதுவரை நடந்தவற்றை அசைபோட்டேன்.

ஏன் இந்தப் பாட்டி அசைக்கவும்முடியாத தன் சரீரத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், வேண்டாத மருமகள் கையில் உணவு உண்ணவேண்டிய நிலை வந்திருக்கிறதே, என்னென்ன பாவம் செய்தாளோ இப்படி அனுபவிக்கிறாள் என்று பலர் என் காதுபட சொன்னதையும் அதைக் கேட்டு அந்தத் தாயின் கண்களில் நீர் வடிந்ததையும் செரித்திருக்கிறேன்.

தன் மருமகள் மகன் மற்றும் குடும்பத்தார் மனந்திருந்துவதற்கு வாய்ப்பாக அந்தத் தாயை இதுவரை கடவுள் வைத்திருந்ததாக எண்ணுகிறேன்.

கடைசிகாலத்திலாவது தன் மருமகளைப் பற்றிய மகனைப் பற்றி தான் கொண்டிருந்த அபிப்பிராயபேதங்களை அந்த மூதாட்டி மாற்றிக்கொள்ள அந்தக் கால அவகாசமும், அவரது சரீர நிலையும் உபயோகப்பட்டதாக எண்ணுகிறேன்.

….
….

….

இவ்வளவுதான் மனித வாழ்க்கை. ஆடி அடங்கும் மனித வாழ்க்கை.

இதற்குள் எவ்வளவு ஆட்டங்கள். .!..!.!

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s