அறிவிருக்கா ?

களம் 1

ராஜா: யோவ்? உனக்கு ஏதாவது இருக்கா? உனக்கு ஏதாவது இருக்கா? அந்தப் பிரச்சினைக்காகவா இப்ப வந்துருக்கம்?

ராஜா: யோவ்? உனக்கு அறிவு இருக்கா?

நிருபர்: சார்,, நீங்க ஒரு பாடகர் இசையமைப்பாளர்……

ராஜா: யோவ்………. நான் கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லு

நிருபர் : சார்….

ராஜா: நான் கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லு…. இல்லைல்ல… நான் கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லு….

நிருபர்: சரி…சொல்லுங்க

ராஜா: உனக்கு அறிவு இருக்கா?

நிருபர்: எனக்கு அறிவிருக்குறதுனாலதான கேக்குறேன்.

ராஜா: அறிவு இருக்குன்றது எந்த அறிவுல கண்டுபிடிக்கிற???

(அறிவாளித்தனமா கேள்விகேட்டுட்டதா நினைச்சிட்டு சுத்தி நிக்குறவங்கள ஒரு பார்வை, மெதப்பா ஒரு சிரிப்பு)

ராஜா: கேக்குறதுக்கு பதில் சொல்லு… ஏய்?

நிருபர்: சார்……….

ராஜா: மொதல்ல நீ வந்து ஏன்கூட பேசுறதுக்கு………….

(இன்னொருவர் இடையில் வந்து- ராஜாவிடம் – சார், போதும்

இன்னொருவர், நிருபரிடம் – இடம் பொருள் ஏவல் இருக்கணும்பா)

ராஜா: உனக்கு எந்த அறிவுல வந்து கேள்வி கேக்குற?

நிருபர்: என்ன சார்? இதுல என்ன சார் இருக்கு? நீங்களும் பாடகர், இசையமைப்……………

ராஜா : யார்ட்ட கேக்கவேண்டிய கேள்விய என்ட்ட கேக்குற?

இன்னாருவர்: இல்ல்ல்ல.. இப்ப வேற இதுல இருக்கார்..?

 

களம் 2

கனமழையின் போது வெள்ள மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு விழா சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது.

விழா நிறைவடைந்ததும் அங்கு வரவழைக்கப்பட்டிருந்த நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அந்த விழாகுறித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தவேண்டி பேட்டி அளிக்கும் நிகழ்ச்சி சம்பிரதாயமாக நடைபெற்றது.

இப்பேட்டியில் விழா நாயகரான

இசைத்துறை வித்தகர் இந்திய இசையின் விடிவெள்ளி –மாஸ்ட்ரோ –

கரகரக்குரலால் அனைவரையும் கட்டிப்போட்ட பாடகர்

இடையறாத பக்தியும் – ஆன்மஞானமும் பெருகப்பெற்ற

ஞானி என்று தன்னைத்தானே போற்றிக்கொள்ளும்

இளையராஜா பேட்டியளித்தார்..

 பேட்டியின்போது தன்னையுமறியாமல் தான் இன்னும் பழைய ராசையாவாக வாழ்ந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தினார்.

இசை – ஞானம் – புகழ் – பணிவு போன்றவையெல்லாம்

கடவுளின் கொடை என்பதை மறந்துவிட்ட

போதையேறிய சாதாரண மனிதன்.

களம் 3

கேமராவ கொண்டு வந்து வைத்துக்கொண்டு
‘ஐயோ கொல்றாங்களே’ன்னு ட்ராமா பண்றதும்,

செத்துட்டானாமேன்னு கேள்வி கேக்குறவன
‘நீதான்டா கொன்ன நீதான்டா கொன்ன’ ன்னு ஆவேசமா திருப்பறதும்

பேட்டிகுடுத்துட்ருக்கும்போது கேள்வி கேக்குறவன ‘ஏய், இங்க வா, நீ எந்த டிவி? அதான் இப்டி கேக்குற? உனக்கு வாய்ல விஷம்,.. அம்புட்டும் விஷம் விஷம்…’ ன்னு விஷத்தைக் கொட்டுறதும்

பிரஸ்மீட்ட கூட்டிவச்சி பேட்டி குடுக்கும்போது கேள்வி கேக்குறவனப் பாத்து ‘நீ எந்த பத்திரிகை- … மலரா? நீங்கள்ளாம் அப்டித்தான் கேப்பீங்க… ஏன் ஜெயலலிதாவப் பாத்து கேளேன்’ ன்னு கத்துறதும்

மீறிக்கேட்டா ‘உன் பத்திரிகையா எனக்கு சம்பளம் தருது… சும்மா போவியா? தூக்கியடிச்சிருவேன் பாத்துக்க’ ன்னு வேட்டிய தூக்கிக்கட்டி நாக்க மடிச்சிக் காட்டுறதும்.

எவ்வளவு நாகரீகமோ அவ்வளவுதான் இந்த விவகாரமும்… அந்த மனிதர்களையெல்லாம் எப்படி சகித்துக்கொண்டோமோ அப்படித்தான் இவரையும்.

என் களம்

பிரஸ் மீட்-ன்னா நிருபர்கள் வருவாங்க, கேள்வி கேப்பாங்க, அவங்க பதில் சொல்லுவாங்க.. சொல்லப்பிடிக்கலைன்னா விருப்பமில்லைம்பாங்க ……..இல்ல அவங்க கருத்து எதுனா இருந்தா சொல்லுவாங்க…

இவர் இசைத்துறையில் வல்லவர்ன்னு நெனச்சு கேட்ட கேள்வியாயிருந்திருந்தா

 1. அந்த இசை நல்லாருக்கு ஆனா பாடல் வரிகள் கேவலம்ன்னு சொல்லிருக்கலாம், இல்லைன்னா
 2. அனிருத்துக்கு இசைன்னா என்னான்னே தெரியலை-எதுலர்ந்தோ காப்பியடிச்சிருக்கார்ன்னு சொல்லிருக்கலாம்

இவர் பாட்டுத்துறையில் வல்லவர்ன்னு நெனச்சு கேட்ட கேள்வியாயிருந்திருந்தா

 1. அந்த பாடல் வரிகள் நல்லாருக்கு ஆனா பெண்கள் கேக்கமுடியாது சமூகத்துக்கு கேவலம்ன்னு சொல்லிருக்கலாம்
 2. ஹ்யூம்ர் சென்ஸ்ஸோட சொல்றதுன்னா என்ன பாடியிருக்கார்ன்னு புரியலை, ஒரே பீப் பீப் ன்னு சத்தம் தான் கேக்குதுன்னு கலாய்ச்சிருக்கலாம்

இவர் இத்தனைநாளா இநத சமூகத்துக்கு ஏதோ செய்யறார்ன்னு நெனச்சு கேட்ட கேள்வியாயிருந்திருந்தா

 1. இந்தப் பாடல் வரிகள் தமிழ் சமூகத்துக்கு நான் மதிக்கும் பெண்மைக்கு அவமானம்ன்னு சொல்லிருக்கலாம்.
 2. இல்லை, தானே இதுபோன்ற அல்லது இதைவிட முக்கல்முனகல் பாடல்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி குத்தினால்

இது எதையுமே சொல்லப் பிடிக்காமல்,

 1. நோ கமெண்ட்ஸ் என்று சொல்லியிருக்கலாம், அல்லது
 2. பாடலைக் கேட்கவில்லை, கேட்டுவிட்டு கருத்து சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்…

 

இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு

ஏய் என்பதும் யோவ் என்பதும் உனக்கு அறிவிக்கிறதா என்பதும்

என்னிடம் கேள்வி கேட்குமளவுக்கு அறிவிருக்கிறதா என்பதும்

கைப்புள்ள ரேஞ்ச்சுக்கு மெதப்பான பார்வையை மிதக்கவிடுவதும்

 

ஞானத்துக்கும் மனிதத்துக்கும் மனிதநேயத்துக்கும் அறிவுக்கும் துளிக்கூட சம்பந்தமில்லை என்பதையே காட்டுகின்றன…

————————————-

யோவ் நிருபரே ?

உங்களுக்கெல்லாம் அறிவிருக்கா?

ராஜா முதலில் சொன்ன

மாற்றம்ன்னா என்ன?  நிரந்தர மாற்றம்ன்னு எதைக் குறிப்பிடுறீங்க? மக்கள் மத்தியில் மனிதநேயம் வளரணும்னே இப்படிப்பட்ட வெள்ளத்தைஇறைவன்  குடுத்துருக்குறான்னு நம்பறேன்றீங்களே? அப்போ மக்களெல்லாம் அவஸ்தைப்படணும்னு நீங்க விரும்புறீங்களா?  நீங்க சொல்ற மாற்றம் புரியுது ஆனா என்ன மாற்றம்ன்னு தெளிவா சொல்லுங்க? இப்படியெல்லாம் கேக்கமாட்டீங்களா?

யோவ் நிருபரே ?

உங்களுக்கெல்லாம் அறிவிருக்கா?

இந்த ஏஆர்ஆர், யுவன், கார்த்திக், ஆண்டனி, எஸ்பிபி, ஹாரிஸ், தினா, இம்மான், டிஎஸ்பி, …………etc……………………………. இவங்கள்ட்டயெல்லாம் கருத்துக்கேக்கலையா?

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

One thought on “அறிவிருக்கா ?

 1. நீங்கள் சொன்ன அனைத்தும் சரி. மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

  ஆனால் ஒன்று: (குறிப்பான தகவல் பார்க்கவில்லை: வெள்ள நிவாரண வேலையின் நடுவில் சிம்புவின் பீப் பாடலைப் பற்றி கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்). சில சமயம் நிருபர்கள் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத (கேட்கப் படுவரின் எண்ணத்தில்) மிக அற்ப விஷயத்தில் சிக்கல் கேள்விகள் கேட்பது நடக்கும் போது எவ்வளவு பொறுமை இருந்தாலும் அதையும் மீறி எக்குத் தப்பாக பதில் சொல்லும் நிலைக்கு ஆளாக்கும் நிருபர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s