கங்காதீர்த்தம் – மகாபாவநாசனமா?

‘श्रीमदखिलमहीमण्डल मण्डनधरणीधर मण्डलाखण्डलस्य, निखिलसुरासुरवन्दित ……’

‘ srimadakhilamahimandala mandanadharanidhara mandalakhandalasya nikhilasurasuravandita …… ‘

ஸ்ரீமதகிலமஹீமண்டல மண்டனதரணீதர மண்டலாகண்டலஸ்ய நிகிலசுராசுரவந்தித ……….

என்று ஆரம்பிக்கும் இந்த சம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்ட ‘ஸ்ரீநிவாஸ / ஸ்ரீவேங்கடேச கட்யத்திற்கு பாடல்வடிவம் ஸ்ரீமான் ஸ்ரீசைல ரங்காச்சாரியார் . இது திருப்பதி வேங்கடேஸ்வர ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் (1940ல் வெளியான) ஸ்ரீவெங்கடேஸ்வர காவ்ய கலாபா என்கிற நூலில் 324ம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்து. இந்த கட்யத்தில் ராகத்துடன் ஆரம்பிக்கும் கடைசிப்பகுதியை டிடிடி வேதபாராயணகர்த்தா ஸ்ரீ பிவி அனந்தசயனம் அய்யங்கார் பாடலாகச் சேர்த்துள்ளார்.

திருமலையில் பிரதி வியாழனன்று திருப்பாவாடைசேவையின்போது மூலவர்முன் உச்சாரணம் செய்யப்படும் மந்திரவகை.

ஸ்ரீ வேங்கடேச கட்யம்

இது சாதாரண இடங்களில் உச்சாடணம் செய்யப்படக்கூடிய ஸ்லோகவகையைச் சேர்ந்தவை இல்லை.. இதை எல்லா வைணவர்களுமோ அல்லது எல்லா இடங்களிலுமோ அல்லது எல்லா நேரங்களிலுமோ பாடப்படக்கூடியவை இல்லை. வேதம் படிக்கும் மாணாக்கர்களுக்கு, அவர்கள் கடவுளுக்கு சேவைசெய்யும்போது உச்ச்சரிப்பதற்காக குருகுலத்தில் சொல்லித்தரப்படுபவை. (சனாதன – வைதிக).

இது இவராலே பாடப்பட்டிருக்கக்கூடாது என்று எஸ்பிபி இதை ஆடியோவாக பாடி வெளிவந்தபோது விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மந்திர வகை. பின்னர் இந்த ஆடியோ சக்கைப்போடுபோட்டுக்கொண்டிருப்பது தனி.

—————————

சரி. இப்போது இந்த வேங்கடேச கட்யத்தைப்பற்றி ஏன் ஒரு பதிவு என்று யோசிக்கிறீர்களா? யாரோ எங்கேயோ எதையோ பாடிவிட்டால் போனால் போகிறதென்று விட்டுவிடலாம்…

முந்தாநாள் வரை ‘பெரியார் பிறந்த மண்ணா இது?’ என்று முழங்கியவர்

கறுப்புத்துண்டுதான் இனி வாழ்நாளெல்லாம் என்று காலையில் மேடையில் கூவிப் பின்னர் மாலையில் மாறிய மஞ்சள் துண்டின் மகிமைக்கு இன்றுவரை விளக்கம்தராதவர்

இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று கூறியவர்

அதே இந்துக்கள் 90சதவீதம்பேர் தன் திமுகவில் உள்ளனர் என்றவர்

இந்துக்கள் நெற்றியில் வைக்கும் பொட்டை என்ன சிவப்பு லைட்டா என்று விகாரமா அர்த்தம் கொடுத்தவர்

அடுத்த வீட்டு பெண்களின் தாலிகளையெல்லாம் வெறும் கயிறு என்று கூறி அறுக்கும் போராட்டம் நடத்துபவர், நடத்துபவர் கூட நடப்பவர்

தாய்மொழி தெலுங்கென்றாலும் தன் தொண்டர்கள் அறியாமல் மறைத்தவர்

தமிழ் தமிழென்று பொய்யாய் முழங்கி –
தமிழனை மெய்யாய் முழுங்கியவர்

தட்சிணாமூர்த்தி என்னும் இயற்பெயரை சமஸ்கிருதப் பெயர் என்று தள்ளிவைத்து
கருணா நிதி யென்னும் புதிய சமக்கிருதநாமகரணம் செய்து
‘கருணா’வும் ‘நிதி’யும் தமிழ்தான் என்று
தமிழை ஏளனம் செய்தவர், தமிழனை நம்பவைத்தவர்

ஆரியர், திராவிடர், சைவம், வைணவம், பூணுல் என்று வெற்றுபூசல் கிளப்புவர்

கடவுள் இல்லை
கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை,
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,
கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்,
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி
-.என்று சொன்ன ஈவேராவே என் தலைவன் என்று பாடும் பகுத்தறிவு பகலவன் முத்துவேல் கருணாநிதி

———————

 • அந்த முகவின் வீட்டில்,
 • அவர் முன்னிலையில்,
 • அவருக்காகவே
 • இந்துக்களால், ஆரியர் என்று அவரால் சொல்லப்படும் வைணவர்களால்,
 • அவர் அழைப்பின் பேரிலேயே வந்து
 • ஏதோ ரெண்டு சுலோகத்தைப் பாடினால்
 • அது என்ன ஏது என்று தெரிந்துகொள்ளவேண்டாமா?
 • தனது தள்ளாதவயதுவரை
 • தான் செய்த மகாபாவங்கள் அத்தனையும்
 • அந்த ஒற்றை மந்திரத்தால் தள்ளிவிடக்கூடுமானால்

அதைப் பற்றி அறிந்துகொள்ளலாமே என்றுதான்…

ஆனால் ஐயோ பாவம்

கொத்துக்கொத்தாய் குடும்பங்குடும்பமாய் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் முதலில் என் கண்முன்னே வந்துநிற்கிறார்கள்.

இவர்செய்த மகாபாவங்களை தீர்த்துக்கொள்ள
எந்த மகாபாவநாசனம் – புண்யதீர்த்தம் இருக்கிறது.?
கங்கை உள்பட !

 

————————

பகுத்தறிவுப் பகலவனும்,
வேங்கடவனின் புகழை கருணாநிதியின் ராமானுஜர் சீரியல்தான் கரை சேர்க்கும் என்று எண்ணும் புரோகிதர்களும்….

 

எஸ்பிபியின் மயக்கும் குரலில்
ஸ்ரீவேங்கடேச கட்யம்

 

 

இந்தப் பதிவை எழுதத்தூண்டிய  2ஜி-க்களுக்கு நன்றி. [ 🙂 ]

km

 

Advertisements

2 thoughts on “கங்காதீர்த்தம் – மகாபாவநாசனமா?

 1. நண்ப டுடேஅண்ட்மீ,

  உங்கள் உழைப்பை என்ன சொல்லி, எப்படி பாராட்டுவது
  என்று தெரியவில்லை…

  எங்கெல்லாமோ பயணம் செய்து, எதை எதையோ தேடி,
  அதில் மிகப் பொருத்தமானதை இங்கு கொண்டு வந்து சேர்த்து,
  நாங்கள் அனைவரும் பார்க்க தந்தமைக்கு
  வந்தனங்கள் பல.

  நான் ஏற்கெனவே பலமுறை சொன்னது போல் –
  நீங்கள் விமரிசனம் தளத்திற்கு கிடைத்துள்ள ஒரு கொடை…
  உங்கள் பணி தொடர்ந்து சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  காவிரிமைந்தன்

  • உண்மையில் உங்களுக்கும் கண்பத்ஜிக்கும் தான் நன்றி சொல்லவேண்டும்.
   நான் வீடியோ போட்டால் ரசித்து ஒரு கமெண்ட்டோடு நின்றுவிடாமல்
   சிவனே என்று இருந்த என்னை
   பெருமாளைப் பற்றி தேடவைத்துவிட்டீர்கள்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s