நான் என்ன அவ்வளவுபெரிய அப்பாடக்கரா?

ஒரு வலைப்பூவில் சொந்தமாக எழுதுவது அவ்வளவு சிரமமான காரியமா?

ஒரு வலைப்பூவில் எழுதப்பட்ட உண்மைக் கருத்துக்களுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவிப்பது அவ்வளவு பெரிய தவறா?

ஒரு வலைப்பூவில் தனது 70 வயது அனுபவத்தை, தான் அனுபவங்களைப் பெற்ற இதே சமூகத்தோடு பகிர்ந்துகொள்ளநினைப்பது அவ்வளவு பெரிய குற்றமா?

அப்படி எழுதுபவர்களை ஊக்குவிப்பதும், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும் அவ்வளவு பெரிய பாவமா?

எதிர்க்கருத்துக்களையும் நாகரிமாக விவாதிக்கும் தளம் இருக்கக்கூடாது என்று நினைக்கும் மனநல வியாதியஸ்தர்களின் கூடாரமா தமிழகம்? இந்தியா?

இதனை அரசியல்சார் பிரச்சினையாகப் பார்க்கும் அதேவேளையில், தமிழ் மொழியில் இயங்கும் வலைத்தளம் என்பதால், நான் மொழிசார் பிரச்சினையாகவும் பார்க்கிறேன்,

  • தமிழர்கள்
  • படித்திருந்தும் முட்டாள்களாகவே,
  • நல்ல அறிவிருந்தும் அரசியல் பற்றிய நடைமுறை அறியாதவர்களாகவே,
  • மனுநீதி தவறா பரம்பரையிலிருந்தாலும் தற்காலநீதி அமைப்புகள் பற்றி அறியாதர்களாகவே …
  • விழிப்புணர்வு அடைந்துவிடக்கூடாது –
  • அடைந்துவிடவே கூடாது என்று எண்ணிசெயலாற்றும்
  • தமிழறிந்த கயவர்களாலேயே கோடாலிக் காம்புகளாலேயே
  • ‘விமரிசனம்’ முடக்கப்படுகிறதா?

+ + +

தேடி சோறுநிதந் தின்று- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிகவுழன்று -பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ ?
……………………..மகாகவி சுப்பிரமணிய பாரதி

+ + +

காய்த்தமரம்தான் கல்லடிபடும் என்பதை நண்பர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

எனது பெயரை உபயோகப்படுத்தி தங்கள் கருத்துக்களை வெளியிடும் பின்னூட்டக் கயவர்களுக்கு – விமரிசனம் தளத்தில் எனது பின்னூட்டம் கீழே..
http://www.vimarisanam.wordpress.com

 

கா.மைஜி மற்றும் விமரிசனம் நண்பர்களுக்கு

காமைஜியின் பதிவுகளை,காமைஜியை ஊக்குவிக்கும்விதமாக இங்கே நான் எழுதுவது சிலருக்கு என்மீது கோபத்தை உண்டாக்கியிருக்கிறது என்று தான் நினைத்தேன்,

நான் எழுதாத இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தபின்,

லிங்க் முதற்கொண்டு எனது பிளாக்குக்கு செலுத்துகிற முறை என்று பார்த்தபின் கொஞ்சம் புரிகிறது,

என்மீதல்ல, என் பெயரின் மீதான காதல் இது என்று…

ஏனென்றால் தன்னைக் கண்டுகொள்ளவேண்டும் என்று நினைக்கிற குழந்தையின் பிடிவாதம். வறட்டுக் கத்தலாகவாவது கத்தி, மற்றவர்களை தன்பக்கம் கவனிக்கவைக்கிற உத்தி.

அப்படியெல்லாம் இல்லை, இது சீரியஸாகவே என்னை என் அடையாளத்தை முடக்கச் செய்யும் ஆரம்பநிலை சதி – அல்லது – சிறுகச்சிறுக சிறுசிறு பின்னூட்டங்கள் வழியாக என்னை முடக்கச் செய்யும் நீண்டகாலத்திற்கு, என் கணக்கின்படி தேர்தல்வரையாவது, திட்டமிடப்பட்ட, நீண்டகாலச் சதி என்று கொண்டால்

முகம்தெரியா வம்(நண்)பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

நீங்கள் நினைக்கும் அளவிற்கு நான் ஒர்த் இல்லை, நண்பர்களே.

இதுநாள்வரை என் பின்னூட்டத்தை நண்பர்கள் கவனித்திருந்தால் கண்டுபிடித்திருக்கலாம்.
1, நான் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னுட்டம் இடுவதில்லை
2. தேவைப்படுகிற இடத்தில் கூட பின்னூட்டம் இடுவதில்லை.
3. என் கருத்தை சொல்லியே ஆகவேண்டும் என்கிற நிலை வந்தால் மட்டும் அதுவும் என் பாணியில்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு. அதை மாற்றமுடியாது. காப்பியடிக்கவேண்டுமானால் செய்யலாம், அதிலும் கொஞ்சம் தேறவேண்டும். அட்சரம் பிசகாமல் காப்பியடிக்கும் தொழிலைச் செய்யும் திறமை உள்ளவரால் சொந்தக் கருத்தை தன்பெயரில் சொல்ல முடியாதா?

முடியும்… ஆனால் கவனிக்கப்பட கொஞ்சம் நாள் ஆகும்.
அதுவரை பொறுமை இல்லாத வறட்டுக் கத்தல் கத்தும் குழந்தை.
அவ்வளவுதான்.

……………………
எனது பெயரில் பொய்யான பின்னூட்டங்களைத் தவிர்க்க
என்னால் முடிந்த பாதுகாப்பு கவசமாக
இனிமேல்
எனது கருத்துக்கள் எதுவாக இருப்பினும்
காமைஜியின் இமெயில் ஐடிக்கு அனுப்புகிறேன்.
அவர் அவரது பதிவில் இணைத்துக்கொள்ளட்டும்,

ஒருவேளை இந்த எக்ஸ்ட்ரா வேலை அவருக்கு சிரமமில்லை எனில்.

………………

இனிமேல் today.and.me இல் எனது பின்னூட்டம் வெளியாகாது.

இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் வம்பர்களே…. கொடுத்துவிட்டேன். பிழைத்துப்போங்கள். என்னையும் பெரிய ஆளாக்கியதற்கு நன்றி.

……………

இனிமேல் today.and.me இல் எனது பின்னூட்டம் வெளியாகாது.
வெளியாகும் பட்சத்தில் கா.மைஜியிடம் இருந்து முறையான அறிவிப்பிற்குப் பின்னரே. அதுவரை today.and.meஇன்வழி வெளியாகும் பின்னூட்டங்கள் என்னுடையதில்லை.

இதை எதிர்பார்க்கவில்லை, இல்லையா வம்பர்களே….
கேட்காததையும் கொடுக்கவைத்து என்னை வள்ளலாக்கிய வம்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
………………………………..

இத்தனைநாள் எதையாவது காரணம் சொல்லிவிட்டு அடிப்பார்கள், ஏன் அடிக்கிறார்கள் எதற்கு அடிக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்

இப்படி எதையுமே சொல்லாமல் அடித்தால் எப்படி, காரணத்தை சொல்லிவிட்டு அடிங்களப்பா வம்பர்களே… கொஞ்சம் ஆறுதலாகவாவது இருக்கும். நானும் தெரிந்துகொண்டு சிரிப்பேன்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s