என் வாக்கு, என் உரிமை.

SA4031+_20160516_154935

போன தேர்தலுக்கு
தேர்தல் கமிஷன் சார்பில் விளம்பரத் தூதராக இருந்தவர்
இந்த வருடமும் தனக்கு விளம்பரம் வேண்டுமென்று
மல்லாக்கப் படுத்துக்கொண்டு காறித் துப்ப
கமிஷன் அவர்மேலேயே மீண்டும் காறித்துப்பி
வந்து ஓட்டுபோடச் சொல்ல
ஒருவழியாய் இன்றைக்கு காமிராக்களின் ப்ளாஸ்லைட்  வெளிச்சத்தில் போட்டுவிட்டார் போல.

இந்தத் தேர்தலுக்கு
தேர்தல் கமிஷன் சார்பில் விளம்பரத் தூதராக இருந்தவர்
இந்த விளம்பரம் போதாதென்று எண்ணி
வெளிநாடுபோய் காறித் துப்பியிருக்கிறார்.
நேற்றைக்கே வர உத்தேசித்திருந்தேன், முடியவில்லை என்று
மன்னிப்பு கேட்பதாக வேண்டிய விளம்பரம் கிடைத்தாகிவிட்டது.

என்னாங்கய்யா உங்க டக்கு?

விளம்பரங்களின் மீதும்
விளம்பர தூதர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை

ஜனநாயகம் – நாளையை மாற்றும் சக்தி நாம்
என்பதில் முழு நம்பிக்கை உண்டு

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறேன்.
அப்போ நீங்க?

Advertisements

அன்றும் இன்றும் என்றும் – திமுக – திருத்தவே முடியாத கட்சி

உங்கள் வாக்கை உறுதியாகச் செலுத்துங்கள்

யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் ஓட்டை செலுத்துங்கள்.

ஆனால்

கண்டிப்பாக திமுகவுக்குமட்டும் ஓட்டுப்போடாதீர்கள்…

 

திமுக இல்லாத தமிழகம்
இனியாவது உருவாகட்டும்.

 

 

0

அன்று இவ்வாறு பிரச்சாரம் செய்த கருணாநிதி
இப்போது யாருடன் கூட்டணி வைத்துள்ளார் ?உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

1

அன்று சொன்னீர்களே? செய்தீர்களா?
உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

2

மயில், மந்தி, குயில் , கோட்டான், பாவாடை, நாடா, காட்டெருமைத்தோலன், பனங்காட்டுத் தோலன்… இதுதான் இவர் முத்தமிழையும் விற்ற  லட்சணம்…

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

3

கலைஞர் கவசம் கேட்டுக் கேட்டு

நெக்குருகி 93-லும் தன் கவசம் மட்டுமே கேட்க விழையும்

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

4

ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ பராக்கிரமவில்
ஒன்றை விட்டுவிட்டார்களா என்ன? நடப்பது என்ன முடியாட்சியா?
நெல்லை ஜெயந்தா துவங்கி வைரமுத்துவரை?
ஏஆர் ரகுமான் முதல் இளையராஜா வரை திரைத்துறையில் நீங்கள் வளைத்துப்போடாத ஆட்கள் யார்? கோரஸ்பாடுபவர் கள் முதலாய் துணைநடிகைகள் வரை உங்களை மகிழ்விக்காதர்களை உயிரோடு விட்டதுண்டா?

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

 

5

தமிழ் தமிழ் என்று எத்தனை தமிழர்களை ஏமாற்றிய  தெலுங்கர் நீர்
தமிழர் தமிழாராய்ச்சி என்று எத்தனையெத்தனை குட்டிக் கொள்ளையர்களை உருவாக்கிய பெருங்கொள்ளைத்தலைவர் நீர்
உமக்கொரு விருது உம் ஆதரவிலான மத்திய அரசே.

இது தான் நமக்கு நாமமே வா?

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

6

சட்டத்தை மீறி, வீரமணியை வெளியே விடுகிறார் முதல்வர்.

அதற்கு அந்த கோழைமணி விசுவாசமாக இல்லாவிட்டால் பத்திரிகையில் வெளியிட்டு பிளாக்மெயில் செய்கிறார் அதே முதல் வர்.

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

7

மீண்டும் அதே கிருஷ்ணசாமியுடன் வேண்டி விரும்பிக் கூட்டணி

மனிதன் என்றால்சூடு சொரணை கொஞ்சமாவது வேண்டும்.

அதுகூட இல்லாமல் எப்படியாவது தன்னை தன் சொத்துக்களை காப்பாற்றவேண்டியே கூட்டணி அமைத்தால்

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

8

இப்போது யாருடன் கூட்டணி???

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

9

சென்னை முழுவதும் தேடிப்பார்த்து விட்டேன்-
அப்படி ஒரு பெரியார் சிலை இல்லவே இல்லை
சொன்னீர்களே செய்தீர்களா?

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

10

 

அரசின் சார்பில் வெளியிட்ப்பட்ட எய்ட்ஸ் விளம்பரத்தில்கூட தன் புகைப்படம் போட்டு விளம்பரம் தேடும் உண்மையான ஸ்டிக்கர் பாய்ஸ் திமுக பாய்ஸ் மட்டும்தான்.

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

11

பிரிக்க முடியாதது ஊழலும் திமுகவும்
இந்த அழகில் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கை
கலெக்ஷன் கரெப்ஷன் கமிஷன் இல்லாத ஆடசியா?

இது மூன்றும் இல்லாவிட்டால்
திமுக-வே இல்லையே?

ஏன் இந்த நாடகம்.

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

அரைவேக்காட்டு திமுக இந்து உபிக்கள்

ஊருக்கு உபதேசம்:

இந்துக்கள் என்றால் திருடர்கள்

இந்துக்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் டேஞ்சர் லைட், இரத்தம்.

snapshot.jpg

தன் குடும்பத்துக்கு:

மனைவிக்கு குங்குமம் வைத்து ஐயர் மந்திரம் ஓத தாலிகட்டி
கோயில் கோயிலாகச் சுற்றுவார்கள்.

kum

stalin.jpg

இப்படிப்பட்ட பகுத்தறிவு புண்ணாக்குகளுக்கு
இந்துக் கோயில் வாசலில் கூடியிருக்கும் பக்தர்களின் ஓட்டுகள் ஏன்? ஏன்?

இப்படிப்பட்ட பகுத்தறிவு புளியம்பழங்களுக்கு
வெற்றித்திலகமாக இரத்தத்தை நெற்றியில் வைத்த
அந்த தொண்டனை என்ன செய்யலாம்?

 

 

 

 

 

 

 

 

மனித இயல்பு எப்போதுமே தங்களுடைய நலன் சார்ந்ததுதான் -பழ கருப்பையா

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தகுந்தவர்

தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூடியவர்

அப்படி வெளிப்படுத்தியதாலேயே கடந்த ஆட்சியில் தாக்கப்பட்டவரும் கூட.……..

——–

 

நீங்கள் என்னோடு இருந்தால் எனக்கு நல்லது என்று நான் நினைத்தால் நான் உங்களை விடமாட்டேன்.

மனித இயல்பு எப்போதும் தங்களுடைய நலன் சார்ந்ததுதான்.

அதிமுகவுக்கு அரசியல்ரீதியாக எது நலம்பயக்குமோ அதை முடிவெடுக்கிற இடத்தில் அம்மா அவர்கள் இருக்கிறார்கள்.

 – பழ கருப்பையா (இணைப்பில் உள்ள வீடியோ)

 

பழ கருப்பையாவின் பல மனக்குறைகளில் இதுவும் ஒன்று

தொண்டர்களை கட்சியில் மதிப்பதில்லை..

 

ஒரு தொண்டன் என்பவன் யார்?

பெருமாளை சேவிக்கும் தொண்டர்களை வணங்கும் தொண்டரடிப்பொடியாழ்வான் ஆனாலும் சரி, பிரகலாதன் நரசிம்மன்மேல் கொண்ட பக்தியானாலும் சரி.

எந்த சூழ்நிலையிலும் தன் தலைமையை தான் நம்புகிறதை விட்டுக்கொடுக்காதவன்.

————

காங்கிரசை அப்புறபடுத்திய பின் இன்று வரை
அசைக்க முடியாத இயக்கங்களாக தமிழகத்தில் நீடிப்பது
அதிமுக வானாலும் சரி திமுகவானாலும் சரி
தொண்டர்கள் பலத்தால்தான்.

காங்கிரசின் பண்ணையார்த்தனத்தை உடைத்து, அடுத்தடுத்த பதவிகளில் உள்ளவர்கள் எந்த தயக்கமும் இன்றி பழகுவது கழகங்களில் மட்டுமே.

கலைஞரை நேரு, வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் எதிர்த்து வாக்குவாதம் செய்வார்களாம். (ஆனாலும் கடைநிலைத்தொண்டர்களுக்கு கட்சிப்பதவி கூட அளித்ததாகத் தெரியவில்லை, அதற்கு 60வயது இளைஞர் அணித் தலைவரே சாட்சி.)

எம் ஜி ஆரிடம் காளிமுத்து, தாமரைகனி, பண்ருட்டியார், ஆர் எம் வீ போன்றவர்கள்.

அதிமுகவின் ஜெ. ஜெயலலிதா தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் எந்தக் கடைநிலை தொண்டருக்கும் தயங்காமல் கட்சிப்பதவி கொடுக்கிறார். சுதந்திரமாக இயங்க அனுமதிக்கிறார். அதற்கு சமீபத்திய உதாரணமாக : சென்றவருடம் கட்சியிலேயே இல்லாத அஸ்பையர் என்ற நிறுவன உரிமையாளர், அவரது அலுவலகத்திற்கு சென்று பார்த்தால் கட்சிக்கொடி கூடக் கிடையாது. அவர் கட்சியை முன்னிறுத்துவதில்லை. ஆனால் அம்மாவோடு அவருடைய போட்டோ மட்டும் இருக்கும். ஆனாலும் இன்றைக்கு கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணித்தலைவர். ஏன் இதே கருப்பையா சென்ற ஆண்டு அதிமுகவுக்கு வந்தபோது வெறும் கட்சிப்பதவியோடு நின்றுவிடாமல் சம்பந்தமேயில்லாத துறைமுகத்தொகுதி வேட்பாளராக நியமித்தவர்தானே.

தலைவர்கள் முதல் சாதாரண வார்டு கவுன்சிலர் வரை தொண்டர்களிடம் நெருக்கமான உறவு கொண்ட காரணத்தால்தான் காங்கிரஸின் இந்திராகாந்தி முதல் முதல் ராஜிவ், சோனியா, ராகுல்காந்தி வரை முயன்றும் பாஜகவின் வாஜ்பாய், அத்வானிஜி முதல் மோடிஜி, தமிழிசை வரை முயன்றும் தேசியக் கட்சிகள் கழகங்களை அசைக்க இயலவில்லை.

இவ்வளவு ஏன்? இவர் துறைமுகம் தொகுதியில் வேட்பாளராக நின்றபோது, இவரது வார்த்தையின்படியே கட்சி கட்சித்தலைமை மதிக்காத தொண்டர்களின் ஓட்டுக்களால் அறுதிப்பெரும்பான்மையில் எப்படி இவரால் ஜெயிக்கமுடிந்தது?

எனவே இவர் கூறுவதில் உண்மையில்லை அல்லது இவரால் இவருக்கு மேல் உள்ள கட்சித்தலைமையையும் சரியாகக் கணிக்கமுடியவில்லை, தனக்குக் கீழ் உள்ள தொண்டர்களையும் சரியாகக் கணிக்கமுடியவில்லை.

துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய மற்ற கட்சித்தலைவர்கள் / பேச்சாளர்கள் தாம் தாம் சார்ந்த கட்சிக்குத் தொண்டர்கள் பாத்திரத்தை சரியாகச் செய்தபோது, கருப்பையா தாம் சார்ந்த கட்சிக்கு உண்மையான தொண்டனாக இருந்தாரா?

இதேபோல் வேறு கட்சிகளிலிருந்து யார் பேசியிருந்தாலும் அன்றைக்கிரவே அவர் வீட்டுக்கு ஆட்டோவோ சுமோவோ போயிருக்கும், மறுநாள் அவர்கள் நிலையை அவர்களால் கற்பனைசெய்துகூட பார்க்கமுடியாது. இவர் சுதந்திரமாகப் பேசமுடிந்ததே அதிமுவில் இறைமை இருக்கிறது என்பதற்கான உதாரணம்.

அந்த இறைமை இருந்தும் அதை நாலரை வருடம் உபயோகப்படுத்திக்கொள்ளாமல் தன் பதவிக்காலம் முடியும் தறுவாயில் மனதில் பட்டதைப் பேசி வெளியில் வந்த இவர் “மனித இயல்பு எப்போதுமே தங்களுடைய நலன் சார்ந்ததுதான்” என ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி.

 ஆனால் தமிழக அரசியலின் அவலம், “இவர் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி”, “மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர்”. இந்த இரண்டு அடைமொழிகளும் தேமுதிகவின் விஜயகாந்த்க்கும் 100சதவீதம் பொருந்தத்தான் செய்கிறது, இல்லையா?

 

இவரது அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டால் (அதே சமயம் அம்மா ஆதரவு) இவரது பேட்டியால் என்னதான் நன்மை என்று பார்த்தால், மீண்டும் சேம்சைட் கோல்தான்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு (திருக்குறள், இறைமாட்சி, 2)
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு (திருக்குறள், இறைமாட்சி, 3)

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவு இவை அதிமுக தலைமையிடமும் தமிழக முதலமைச்சரிடமும் மட்டும்தான் இருக்கின்றன என்பதை பழ கருப்பையா தெளிவுபடுத்தியிருக்கிறார்.

 

பி.கு. இறுதியாக பாண்டே கேட்ட “நெறிசார்ந்த அரசியல் பேசும் பழ கருப்பையா 2011 தேர்தலில் 4.50 லட்சம் கணக்குகாட்டிய நீங்கள் அவ்வளவுதான் செலவு செய்தீர்களா?” எதையும் சுதந்திரமாக மனதில் பட்டதைப் பேசிப்பழகும் கருப்பையா “ஆமாம், அதே தொகைதான் ” என்று பொய்யாகவாவது சொல்லித்தொலைத்து தூயவர் என்ற பட்டத்தையாவது வாங்க முயன்றிருக்கலாம். அந்தோ, பரிதாபம்.

 

 

 

 

 

நான் எதையும் ஆதாரத்துடன் பேசுவேன் :-D

நான் எதையுமே ஆதாரத்துடன் தான் பேசுவேன்

————–
சொல்வது நான் அல்ல,

திமுக சாம்ராஜ்யத்தின்
தேறவே முடியாத வாரிசு
மு.க.ஸ்டாலின்

தமிழைக் கொலையாய்க் கொலைசெய்துவிட்டு
இரண்டுதலைமுறைத் தமிழர்களை இந்தி படிக்கவிடாமல் வெறியேற்றிவிட்டு
தன் குடும்பத்தை இந்தியில் தழைக்கவைத்து
இந்தியில் பதில் வருகிறது பாருங்கள் என்று பின்னணியில்
பெரிய மொழிப்போர் தியாகிமாதிரி கமெண்ட் வேறு,
இந்தியில் போஸ்டர் அடித்து ஒட்டி ஓட்டுக்கேட்கும்,
இந்தி தெரிந்ததால்தான் தயாநிதியை மத்திய அமைச்சர் ஆக்கினோம் என்று அந்தர்பல்டி அடிக்கும்

திருத்தவே  முடியாத கலகம்……..

————–

ஒரு நம்பருக்கு பலர் பேச முயலும் போது
எங்கேஜ் ஆக போவது இயற்கை. .

ஆனால் அதை அரசியலாக்கி பெருமை பட நினைத்த ஸ்டாலின் மொக்கையானதுதான் காமெடி. . .

————–

நன்றி S.Nagarajan

திரு. ஸ்டாலின் வாங்கிய செம பல்பு . .

நேற்று திருச்சியில் வீரவணக்கநாள் கூட்டத்தில்
பேசிய ஸ்டாலின் ,

இடையில் அம்மா கால் செண்டருக்கு மாறினார் .

“இங்கே பாருங்க மக்களே , உங்க முன்னாடியே 1100 க்கு போன் போடுறேன்” என கூறி போன் போட்டார் .

அதில் எங்கேஜ் குரல் “இங்கிலீஷிலும்
இந்தியிலும்” குரல் வந்தது .
“பாத்தீங்களா

இந்த சேவையை” என நக்கலாக கூறிவிட்டு
“இதே என் தொகுதி கொளத்தூர்க்கு என தனி நம்பர் அறிவிச்சிருக்கேன் .அது 78108 78108 . அதுக்கு போன் செய்றேன் பாருங்க. .””

என கூறி அந்த
தன் தொகுதி நம்பருக்கு டயல் செய்தார் .
அதில்
டொய்ங்
டொய்ங் என சவுண்டுதான் வந்தது .

ஸ்டாலின் முகம் சுருங்கிபோச்சி.
பின் மீண்டும் முயற்சி செய்ய

அதே
டொய்ங்க்
டொய்ங்க் தான்.
. . .
உடனே வேற தலைப்பிற்கு போய்விட்டார்.
பல பேர் கூடியிருந்த கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சி இது. .
இதுல கலைஞர் டீவில லைவ் வேற. . .

இது தேவையா தளபதி ????

 

————–

 

அரசியல் நாகரிகத்திற்கும்
திமுக-விற்கும் காததூரம்

 

நான் என்ன அவ்வளவுபெரிய அப்பாடக்கரா?

ஒரு வலைப்பூவில் சொந்தமாக எழுதுவது அவ்வளவு சிரமமான காரியமா?

ஒரு வலைப்பூவில் எழுதப்பட்ட உண்மைக் கருத்துக்களுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவிப்பது அவ்வளவு பெரிய தவறா?

ஒரு வலைப்பூவில் தனது 70 வயது அனுபவத்தை, தான் அனுபவங்களைப் பெற்ற இதே சமூகத்தோடு பகிர்ந்துகொள்ளநினைப்பது அவ்வளவு பெரிய குற்றமா?

அப்படி எழுதுபவர்களை ஊக்குவிப்பதும், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும் அவ்வளவு பெரிய பாவமா?

எதிர்க்கருத்துக்களையும் நாகரிமாக விவாதிக்கும் தளம் இருக்கக்கூடாது என்று நினைக்கும் மனநல வியாதியஸ்தர்களின் கூடாரமா தமிழகம்? இந்தியா?

இதனை அரசியல்சார் பிரச்சினையாகப் பார்க்கும் அதேவேளையில், தமிழ் மொழியில் இயங்கும் வலைத்தளம் என்பதால், நான் மொழிசார் பிரச்சினையாகவும் பார்க்கிறேன்,

  • தமிழர்கள்
  • படித்திருந்தும் முட்டாள்களாகவே,
  • நல்ல அறிவிருந்தும் அரசியல் பற்றிய நடைமுறை அறியாதவர்களாகவே,
  • மனுநீதி தவறா பரம்பரையிலிருந்தாலும் தற்காலநீதி அமைப்புகள் பற்றி அறியாதர்களாகவே …
  • விழிப்புணர்வு அடைந்துவிடக்கூடாது –
  • அடைந்துவிடவே கூடாது என்று எண்ணிசெயலாற்றும்
  • தமிழறிந்த கயவர்களாலேயே கோடாலிக் காம்புகளாலேயே
  • ‘விமரிசனம்’ முடக்கப்படுகிறதா?

+ + +

தேடி சோறுநிதந் தின்று- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிகவுழன்று -பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ ?
……………………..மகாகவி சுப்பிரமணிய பாரதி

+ + +

காய்த்தமரம்தான் கல்லடிபடும் என்பதை நண்பர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

எனது பெயரை உபயோகப்படுத்தி தங்கள் கருத்துக்களை வெளியிடும் பின்னூட்டக் கயவர்களுக்கு – விமரிசனம் தளத்தில் எனது பின்னூட்டம் கீழே..
http://www.vimarisanam.wordpress.com

 

கா.மைஜி மற்றும் விமரிசனம் நண்பர்களுக்கு

காமைஜியின் பதிவுகளை,காமைஜியை ஊக்குவிக்கும்விதமாக இங்கே நான் எழுதுவது சிலருக்கு என்மீது கோபத்தை உண்டாக்கியிருக்கிறது என்று தான் நினைத்தேன்,

நான் எழுதாத இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தபின்,

லிங்க் முதற்கொண்டு எனது பிளாக்குக்கு செலுத்துகிற முறை என்று பார்த்தபின் கொஞ்சம் புரிகிறது,

என்மீதல்ல, என் பெயரின் மீதான காதல் இது என்று…

ஏனென்றால் தன்னைக் கண்டுகொள்ளவேண்டும் என்று நினைக்கிற குழந்தையின் பிடிவாதம். வறட்டுக் கத்தலாகவாவது கத்தி, மற்றவர்களை தன்பக்கம் கவனிக்கவைக்கிற உத்தி.

அப்படியெல்லாம் இல்லை, இது சீரியஸாகவே என்னை என் அடையாளத்தை முடக்கச் செய்யும் ஆரம்பநிலை சதி – அல்லது – சிறுகச்சிறுக சிறுசிறு பின்னூட்டங்கள் வழியாக என்னை முடக்கச் செய்யும் நீண்டகாலத்திற்கு, என் கணக்கின்படி தேர்தல்வரையாவது, திட்டமிடப்பட்ட, நீண்டகாலச் சதி என்று கொண்டால்

முகம்தெரியா வம்(நண்)பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

நீங்கள் நினைக்கும் அளவிற்கு நான் ஒர்த் இல்லை, நண்பர்களே.

இதுநாள்வரை என் பின்னூட்டத்தை நண்பர்கள் கவனித்திருந்தால் கண்டுபிடித்திருக்கலாம்.
1, நான் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னுட்டம் இடுவதில்லை
2. தேவைப்படுகிற இடத்தில் கூட பின்னூட்டம் இடுவதில்லை.
3. என் கருத்தை சொல்லியே ஆகவேண்டும் என்கிற நிலை வந்தால் மட்டும் அதுவும் என் பாணியில்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு. அதை மாற்றமுடியாது. காப்பியடிக்கவேண்டுமானால் செய்யலாம், அதிலும் கொஞ்சம் தேறவேண்டும். அட்சரம் பிசகாமல் காப்பியடிக்கும் தொழிலைச் செய்யும் திறமை உள்ளவரால் சொந்தக் கருத்தை தன்பெயரில் சொல்ல முடியாதா?

முடியும்… ஆனால் கவனிக்கப்பட கொஞ்சம் நாள் ஆகும்.
அதுவரை பொறுமை இல்லாத வறட்டுக் கத்தல் கத்தும் குழந்தை.
அவ்வளவுதான்.

……………………
எனது பெயரில் பொய்யான பின்னூட்டங்களைத் தவிர்க்க
என்னால் முடிந்த பாதுகாப்பு கவசமாக
இனிமேல்
எனது கருத்துக்கள் எதுவாக இருப்பினும்
காமைஜியின் இமெயில் ஐடிக்கு அனுப்புகிறேன்.
அவர் அவரது பதிவில் இணைத்துக்கொள்ளட்டும்,

ஒருவேளை இந்த எக்ஸ்ட்ரா வேலை அவருக்கு சிரமமில்லை எனில்.

………………

இனிமேல் today.and.me இல் எனது பின்னூட்டம் வெளியாகாது.

இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் வம்பர்களே…. கொடுத்துவிட்டேன். பிழைத்துப்போங்கள். என்னையும் பெரிய ஆளாக்கியதற்கு நன்றி.

……………

இனிமேல் today.and.me இல் எனது பின்னூட்டம் வெளியாகாது.
வெளியாகும் பட்சத்தில் கா.மைஜியிடம் இருந்து முறையான அறிவிப்பிற்குப் பின்னரே. அதுவரை today.and.meஇன்வழி வெளியாகும் பின்னூட்டங்கள் என்னுடையதில்லை.

இதை எதிர்பார்க்கவில்லை, இல்லையா வம்பர்களே….
கேட்காததையும் கொடுக்கவைத்து என்னை வள்ளலாக்கிய வம்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
………………………………..

இத்தனைநாள் எதையாவது காரணம் சொல்லிவிட்டு அடிப்பார்கள், ஏன் அடிக்கிறார்கள் எதற்கு அடிக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்

இப்படி எதையுமே சொல்லாமல் அடித்தால் எப்படி, காரணத்தை சொல்லிவிட்டு அடிங்களப்பா வம்பர்களே… கொஞ்சம் ஆறுதலாகவாவது இருக்கும். நானும் தெரிந்துகொண்டு சிரிப்பேன்.